Skip to content
Home » தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும்…… இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும்…… இந்திய வானிலை ஆய்வு மையம்

  • by Authour

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், இன்று தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தமிழகம், கர்நாடகா வடக்கு, மத்திய பிரதேசம் கிழக்கு, உத்திர பிரதேசம் கிழக்கு, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் இன்று வெப்ப அலை வீசக்கூடும். இதன் காரணமாக பொதுமக்கள் அசவுகரியமான சூழலை எதிர்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *