தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருச் சேலூர் என்கிற கோவில் தேவராயன் பேட்டை அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. இதை யொட்டி கடந்த 7 ந் தேதி காப்பு கட்டப் பட்டது. நேற்று குடமுருட்டி ஆற்றின் கரையிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால் குடம், அலகு காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதியுலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்க
ள் பங்கேற்றனர்.
பாபநாசம் அடுத்த திருப்பாலைத்துற அருள்மிகு தவள வெண்ணகையாள் உடனுறை பாலைவனநாதர் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் சீர்வரிசையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஆகம விதிப்படி, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க, அருள்மிகு தவள வெண்ணகையாள் அம்பாளுக்கும் பாலைவன நாதசுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடந்தது. அதைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப் பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருக் கல்யாணத்தை கண்டு களித்தனர்.
கோவில் வளாகத்தில் நாட்டிய நிகழ்ச்சியும், திருமண விருந்தும் நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் விக்னேஷ் உட்பட பங்கேற்றனர்,