ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த பிறகு, முதலில் 72 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தமிழக தேர்தல் கமிஷன் தெரிவித்த நிலையில், நள்ளிரவில் அதனை குறைத்து, 69.46 சதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் கமிஷன் மாற்றியது. தற்போது 69.72 % ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் கமிஷன் (இன்று-ஏப்-21) 3 வது முறையாக மாற்றி கூறியுள்ளது. 3வது முறையாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள புள்ளி விபரம் படி, அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20% , குறைந்தபட்சம் மத்திய சென்னையில்53.96 % ஓட்டுகள் பதிவாகியுள்ளது. லோக்சபா தேர்தல் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தற்போது தமிழகத்தில் 69.72% ஓட்டுகள் பதிவாகியுள்ளன என இந்திய தேர்தல் கமிஷன் மாற்றியுள்ளது. தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள ஓட்டு சதவீதம் தொகுதி வாரியாக பின்வருமாறு: