திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் மாதாகோயில் தெருவைச சேர்ந்தர் அருண்ராஜ்((41).இவர் ஜல்லிக்கட்டு வீரர்.
கடந்த 19 ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு வாக்கு செலுத்த சென்ற அருண்ராஜை. பாசன வாய்க்கால் கரையில் மது அருந்தி கொண்டிருந்த தயாளன், சங்கர், ரமேஷ் உள்ளிட்டோர் அருண் ராஜை வழிமறித்து கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அருண்ராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.