தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் நேற்ற நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… என் அன்பு உறவுகளுக்கு வணக்கம்… என் மீது நம்பிக்கை கொண்டு மாற்றத்தை விரும்பி நாம் தமிழர் கட்சியின் ஒலிவாங்கி மைக் சின்னத்தில் வாக்களித்து என்னை மக்கள் பணியாற்ற உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கு வழங்கிய திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள என் அன்பு நெஞசங்களுக்கும் என் ஜல்லிக்கட்டு உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல என தெரிவித்துள்ளார். ஜூன் 4 முதல் மக்கள் பணியில் பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
வாக்களித்தவர்களுக்கு நன்றி… திருச்சி நாதக வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்..
- by Authour