கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்ன தாதம்பாளையம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் மேலும் இந்த பகுதியில் தமிழ்நாடு அரசு வனத்துறைக்கு சொந்தமான மர சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது
மேலும் தற்போது இந்த கிராமத்தில் இருந்து வனத்துறைக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டு தற்போது உபயோகத்தில் இருந்து வருகிறது ஆனால் தற்போது இந்த பகுதிக்கு புதிய சாலை வேண்டுமென்று பஞ்சாயத்து
சார்பாக முடிவு செய்யப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் சாலை வசதி ஏற்படுத்தி தர அனுமதி வழங்கப்பட்டது . ஆனால் இந்த பகுதியில் பாதி வழிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு மீதமுள்ள பகுதிகளுக்கு வனத்துறைக்கு சொந்தமான இடம் ஆகவே சாலை போடக்கூடாது என்று தற்போது வனத்துறை அலுவலர்கள் அனுமதி மறுத்துள்ளனர்..
இந்த சாலை வசதியால் தற்போது சித்திரை மாதத்தில் இந்த கிராமத்தில் திருவிழா நடத்துவதுண்டு திருவிழா நடத்தும் பொழுது தேரோட்டம் நடைபெறும் அந்த வழியாக தேரோட்டம் வரும் வழியில் தற்போது சாலை பராமரிப்பு பணிகள் சரியாக செய்யப்படாததால் திருவிழா இடையூறு ஏற்படுத்தும் விதமாக வனத்துறை அலுவலர்கள் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினர்.
மேலும் வனத்துறை அலுவலர்களை கண்டித்து கரூர் தாராபுரம் சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட அந்த கிராம மக்கள் வனத்துறையை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பரமத்தி போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் மேலும் சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தற்போது கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.