திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அப்போது சில மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 4ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா காலமானார். அவரது மறைவைத்தொடர்ந்து காலியாக உள்ள இடத்துக்கும் இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.