நடிகை ரம்யா பாண்டியன் தனது அக்கா மற்றும் அம்மா என குடும்பத்துடன் வரிசையில் நின்று இன்று மதியம் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மேலும், ஜனநாயக கடமையான வாக்கு செலுத்துவதை, அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இதுபற்றி, வாக்களித்துவிட்டு அவர் கொடுத்துள்ள பேட்டியில், “நாம் அனைவரும் 100 சதவீத அனைவரும் வாக்களிக்க வர வேண்டும். அது நம் அனைவரின் கடமை.
அதைவிடுத்து, நாட்டினை மாற்றும் சக்தியாக தேர்தலில் வாக்களிக்க மறந்து விடுகிறோம். இது தவறு. நாம் அனைவரும் நிச்சயம் வாக்களித்து நம் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்” என்று வாக்காளர்களை அறிவுறுத்தினார்.