சேலம் மாவட்டத்தில் வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். சேலம், செந்தாரப்பட்டியில், சின்னப்பொண்ணு (77) என்பவர் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில், வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பழனிசாமி (65) என்பவர் உயிரிழந்தார். வெயில் கடுமையாக இருப்பதால் முதியவர்கள் கவனமுடனும், மாலையும் வந்த வாக்களிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.