மக்களவைத் தேர்தல் நாளை காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் நடைபெறுகிறது. வாக்காளர் அடையாள இல்லை என்றாலும் ஆதார் ,ஓட்டுநர் உரிமம் ,வங்கி கணக்கு புத்தகம் ,மருத்துவ காப்பீடு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மாற்று திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க வாகனம் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் 6 மணிக்கு முன்பாக வரிசையில் வந்து நிற்கும் அனைவருக்கும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிடினும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான 68,321 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.23 கோடி , முதல் தலைமுறை வாக்காளர் எண்ணிக்கை 10.92 லட்சம் , தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர்கள் 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.