இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் ஜாவா தீவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் 800-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.