திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 16ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கோவிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது. கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி. இளங்கோவன், உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.
அப்போது கடந்த 6 நாட்களில் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ. 87 லட்சத்து 57 ஆயிரத்து 91 ரூபாய் ரொக்கமும், 0.918 கிராம் தங்கமும், 1 கிலோ 644 கிராம் வெள்ளியும், 103 அயல்நாட்டு நோட்டுகளும், 240 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன எனத் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.