Skip to content
Home » கவர்னர் ரவி அந்தர்பல்டி….தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு புது விளக்கம்

கவர்னர் ரவி அந்தர்பல்டி….தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு புது விளக்கம்

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ரவி,  தமிழ்நாடு என்பது தனி நாடு போல இருக்கிறது. தமிழகம் என்று தான் சொல்ல வேண்டும் என தமிழ் மக்களுக்கு புதிய விளக்கம் அளிக்க முற்பட்டார். தமிழ்நாடு  பெயருக்காக இந்த மாநிலம் செய்த தியாகங்கள், போராட்ட வரலாறு தெரியாமல் அவர்  வாய்க்கு வந்தபடி பேசி, ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின்  எதிர்ப்பை சம்பாதித்த்து கொண்டார்.

வழக்கமாக ரவியின் அர்த்தமற்ற பேச்சுக்களுக்கு முட்டு கொடுக்கும்,  அதிமுக  மற்றும்  புதுவை கவர்னர் தமிழிசை கூட, ரவியின் தமிழ்நாடு பெயர் சர்ச்சையில் ரவிக்கு எதிரான கருத்தைத்தான் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது டில்லியில் இருக்கும் ரவியின் பெயரால் சென்னையில் கவர்னர் மாளிகை சார்பில்  ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் பொங்கல் விழாவுக்கு தமிழக ஆளுநர் என பத்திரிகை அடித்த கவர்னர், இப்போது தமிழ்நாடு ஆளுநர் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த  அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“2023 ஜனவரி 4-ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நிறைவடந்த ‘காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்’ ஒரு மாத காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது “காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்”. அந்த காலத்தில் ‘தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றைப் பண்பாட்டுச் சூழலில் ‘தமிழகம்’ என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக்கொள்கிறேன். எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள் விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி தமிழக அரசியல் தலைவர்கள் கூறும்போது, விரைவில் மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில் இப்படி போகிற இடமெல்லாம் பிரச்னை செய்ய வேண்டாம் என டில்லி , ரவியை கண்டித்ததால் அவர் இந்த மறுப்பு தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார் என  கருதுவதாக குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *