தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் வழிப்பாடு செய்தார். வழிப்பாடு முடித்து விட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தவர் கோவில் முன்பு இருந்த முறுக்கு கடைக்கு சென்றவர் முறுக்கு வியாபாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
பின்பு தொண்டர்களின இரு சக்கர வாகன அணிவகுப்புடன் திறந்த வாகனத்தில் நின்றவாறு மாரியம்மன் கோவில், கடகடப்பை, நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய வேட்பாளர் சிவநேசன் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டுக் கொண்டார்.