புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தலும் வரும்19ம் தேதி நடக்கிறது. அங்கும் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இறுதிக்கட்ட பிரசாரத்தையொட்டி அங்கு பாஜக வேட்பாளரும் மாநில உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் ஓட்டுக்கு ரூ.500 மற்றும் பல பரிசுபொருட்களை தாராளமாக வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் இன்று கூறியதாவது:
புதுச்சேரியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறது. அரசும், தேர்தல் ஆணையமும் எதையும் கண்டுகொள்ளவில்லை.அதிமுக வேட்பாளர் நமச்சிவாயம் ஓட்டுக்கு ரூ.500 கொடுக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ரூ.200 கொடுக்கிறார். தேர்தல்விதிகள் காற்றில் பறக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் புதுச்சேரி தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலை புறக்கணிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.