கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி இன்று இரண்டாம் நாள் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடர்ந்து நாள்தோறும் சுவாமி உற்சவர் திருவீதி விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக அபய பிரதான ரெங்கநாத சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா காட்சியளித்தார்.
நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு
மேளதாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது.
கரூர் அபய பிரதான ரங்கநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சிம்மவாகன திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.