சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தின் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில், சங்கர் ராவ் என்ற அந்த அமைப்பின் முக்கிய தலைவனும், போலீசாரால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பல நக்சலைட்களும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இன்னும், பல நக்சலைட்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக்கூறியுள்ள பாதுகாப்பு படையினர், பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர். கொல்லப்பட்ட நக்சலைட்களிடம் இருந்து வெடிமருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.