தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டியிடுகிறார். இவர் இன்று தனது தென் சென்னை தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அக்கா 1825 (365×5 years) என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை ,தமிழிசை சவுந்தரராஜனின் தென்சென்னை உத்தரவாதம் என்ற வாசகத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
* தென் சென்னையில் குப்பைகளை அகற்றவும், மழை நீர் வடிகாலுக்கும் தனி திட்டம். * தென் வெள்ள பாதிப்பை தடுக்க தேர்தல் வாக்குறுதியில் முக்கியத்துவம்.
மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம். * தென் சென்னையில் உள்ள மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த திட்டம். * பெருங்குடியில் குப்பைகள் அடைக்கப்படுவதால், மழைநீர் வடிகால் பிரச்சனைகளை தீர்த்து மீனவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.
6 சட்டசபை தொகுதிகளிலும் 6 அலுவலகங்கள் திறக்கப்படும். * மீனவர்களுக்கான ஆலோசனைக்குழு போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. நான் தொடபு எல்லைக்கு உள்ளே உள்ள பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி, அவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணையும் கூறினார்.