ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. ஆரம்பம் முதல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மிக அதிக ஓட்டுகள் பெற்று வருகிறார்.9வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 9சுற்று முடிவில் திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன்70,299 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னர24,985 வாக்குகள் பெற்றிருந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா4,210தேமுதிக வேட்பாளர் ஆனந்த்607 வாக்குகள் பெற்றிருந்தனர்.
முதல் ரவுண்ட் முடிவில் 30 வேட்பாளர்கள் ஒரு ஓட்டுக்கூட பெறாமல் இருந்தனர். 2வது சுற்று முடிவில் 12 வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. சுற்றில் ராஜேந்திரன் என்ற வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.