திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள் வெகு விமர்சையாக நடைபெற்றது. முத்துக்குறி என்னும் அரையர் சேவைக்காக நம்பெருமாள் – முத்து நேர் கிரீடம்; முத்து அங்கி அணிந்து, மகாலக்ஷ்மி பதக்கம், தங்க பூண்
பவழ மாலை, சந்திர ஹாரம், மகரி, 2 வட முத்து சரம் ; முத்து அபய ஹஸ்தம்; முத்து கடி அஸ்தம் (இடது திருக்கை) முத்து கர்ண பத்திரம்; முத்து திருவடி அணிந்து சேவை சாதித்தார்.