கர்நாடகத்தில் 2014ம் ஆண்டு மரகும்பி என்ற கிராமத்தில் நடந்த ஒரு கலவரத்தில் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கொப்பல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் ஏற்கனவே 100 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதைக்கேட்ட ஒருவர் அதிர்ச்சியில் கோர்ட்டிலேயே இறந்தார். 5 பேருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்ற சிறார்கள் கூர் நோக்கு இல்லததில் அடைக்கப்பட்டனர்.
இந்தியாவில் ஒரு வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.