96 படத்தின் மூலம் மக்களின் மனதை இடம் பிடித்த கௌரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. விஜயின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். துணை நடிகையாக வலம் வந்துக் கொண்டிருந்த கௌரி, அடியே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் கலக்கி வரும் இளம் நடிகையாக இருந்து வரும் கௌரி, மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும்
நடித்து வருகிறார். தனக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ள இவர் சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி கிளாமர் புகைப்படங்கள் பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.