Skip to content

93 வயதில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கும் பிரபல நடிகர்….

  • by Authour

‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘ஹரா’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். மேலும், அரசியல்வாதியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின்

பணிகள் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.  இந்நிலையில், ‘ஹரா’ திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் நடிகர் சாருஹாசன் 93 வயதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!