கோவை மாவட்டம், ஆனைமலை அருகே உள்ளது திவான்சாபுதூர் கிராமம், இந்த கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஜப்பார் என்ற 92வயது முதியவர். இவரின் மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் இவரது வீட்டை மகன்கள் அப்துல்முத்தலீப்,சாஹீல் அமீது, முகமதுகனி, ஆகிய மூன்று நபர்களும் சேர்ந்து கடந்த ஏழு மாதத்திற்கு முன் எழுதிவாங்கி கொண்டனர்.
சில நாட்களில் தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள் , இது குறித்து எனது மகள் மற்றும் மகள் வழி பேரனிடமும் கூறி உள்ளார். மனைவி அணிந்து இருந்த தங்க நகைகளையும் 3 மகன்களும் எடுத்து கொண்டு தந்தையை அனாதையாக விட்டு விட்டனர் .
இவரது நிலைமையை அறிந்த மகளும், பேரனும், முதியவரை பொள்ளாச்சி சார் ஆட்சியர், அலுவலகத்திற்கு என்னை அழைத்து சென்றனர். சார் ஆட்சியரிடம் நடந்ததை சொல்லி உள்ளார்.இப்போது கோவை கலெக்டரிடமும் புகார் செய்து உள்ளார். அத்துடன் வீட்டை மகன்களிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என்றும் கூறி உள்ளார். இவரது சோக கதையை கேட்ட மக்கள், தென்னைய பெத்தா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீரு , பெத்தவர் மனதோ பித்தம்மா, பிள்ளையின் மனதோ கல்லம்மா என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது என்று கூறினர்.