Skip to content

தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்

  • by Authour

தஞ்சை அருளானந்தநகர் பிரிவு  மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) விமலா தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது. 89 உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின் இணைப்புகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் 9 மின் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அபராதத்தொகை யாக ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 518 வசூலிக்கப்பட்டது. இந்த  தகவலை   தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!