Skip to content

திருச்சி மாவட்டத்தில் இன்று 8,000 சலூன் கடைகள் அடைப்பு…

  • by Authour

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் முடி திருத்தும் தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை எடுத்து தமிழகம் முழுவதும் இன்று மூன்றரை லட்சம் சலூன் கடைகள் அடைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 8,000 த்துக்கு மேற்பட்ட சலூன் கடைகள் அடைக்கப்பட்டதாக தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தெரிவித்தார்.