Skip to content

80 வயதில் காதல்… காலம் தப்பி பிறந்துட்டேன்… பாரதிராஜா…

திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகை சம்யுக்தா மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

தமிழில் களரி படத்தில் அறிமுகமாயிருந்தார். ‘வாத்தி’ திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா பேசியதாவது:- வயதில் சிறியவர்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் தனுஷ், ஜி.வி.காலில் விழுவேன். ஜி.வி. பிரகாஷ் கடவுளின் குழந்தை. தனுஷ் சிறந்த கலைஞன் மற்றும் நல்ல மனிதன். சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் காதலிக்க தோன்றுகிறது. கடலோர கவிதைகள் படத்தில் ஒரு டீச்சரை அறிமுகப்படுத்தினேன். இப்போது சம்யுக்தாவை பார்க்கும்போது காலம் தப்பி பிறந்து விட்டோனோ என தோன்றுகிறது. அவரை காதலிக்காமல் இருக்கவில்லை. இருந்தாலும் இப்போதும் சம்யுக்தாவை காதலிக்கிறேன் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!