தஞ்சாவூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வல்லம் பகுதியில் உள்ள 8 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த பிப்.17-ம் தேதி வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தினேஷ்குமார்(32), கண்ணன்(74), சரவணன்(37) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து தினேஷ்குமார் மற்றும் கண்ணன், சரவணன் ஆகிய3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் நேற்று உத்தரவிட்டதை அடுத்து, மூவரையும் திருச்சி மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சை அருகே 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 3 பேர் குண்டாசில் கைது..
- by Authour
