மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தொழுதாலங்குடி ஊராட்சி தேரழுந்தூர் பிடாரி அம்மன் கோவில் தெருவில் உறவினர் தமயந்தி என்பவருடன் வசித்து வருபவர் மூதாட்டி வசந்தா (60). இவர் இன்று காலை வெற்றிலை பாக்கு வாங்குவதற்காக கடைக்கு சென்று உள்ளார். கோவிந்தராஜ பெருமாள் கோவில் அருகே சென்றபோது அங்கு சுற்றி கொண்டிருந்த தெரு நாய் மூதாட்டி வசந்தவை விரட்டி விரட்டி கடித்தது. இரண்டு கைகள் மற்றும் காலில் நான்கு இடங்களில் நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த மூதாட்டி தேரழுந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதே நாய் கடித்ததில் லட்சுமி, செல்வம், அர்ஜுணன் ஆகியோர் காயமடைந்து தேரழுந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று சென்றனர். இன்று மட்டும் தெரு நாய் 8 பேரை கடித்துள்ளதாகவும், கால்நடைகளையும் கடித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுவரை வெறி கொண்டு திரியும் நாயை பிடிக்கவில்லை என்றும் உடனடியாக பொதுமக்களை தாக்கி கடித்து காயப்படுத்தி வரும் நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே தெரு நாய் கடித்து 8 பேர் காயம்….. மூதாட்டி படுகாயம்….
- by Authour
