Skip to content
Home » 8 மாத கர்ப்பிணி மர்ம சாவு….. கணவன் தலைமறைவு…..

8 மாத கர்ப்பிணி மர்ம சாவு….. கணவன் தலைமறைவு…..

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வீரக்குமார் – சரண்யா தம்பதிக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது. சரண்யா தற்போது 8 மாத கரப்பிணியாக இருந்தார்.  இந்நிலையில், தீபாவளி அன்று இரவு உறங்கிய சரண்யா, மறுநாள் காலை படுக்கையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சரண்யாவின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து உத்தமபாளையம் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தபோது கணவன் வீரக்குமார் தனது குழந்தையுடன் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. எனவே, சரண்யாவை அவரது கணவர் கொலை செய்தாரா அல்லது சரண்யா தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *