அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 373 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமியால், பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக, அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கண் பார்வை குறையுடைய மாணவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை ஒலி (Sound) வாயிலாக கற்றுக்கொள்ளும் பொருட்டு மென்பொருள் (Software) பதிவேற்றம் செய்யப்பட்ட கேட்கும் கருவியிணை (Daisy player) கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.13,000 மதிப்பில் 08 கண் பார்வை குறையுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1,04,000 மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சுமதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தம் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்