தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பகுதிகளான கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வரும் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.15, 16, 17ம் தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
