திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மேட்டுப்பட்டி நெசவாளர் காலனியை சேர்ந்த சந்திரகுமார் இவரது மகன் கோகுல்நாத் (13) சந்தபாளையம் அரசு நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தவர், திங்கள் கிழமை பள்ளிக்கு செல்லாததால் அவரது தாய் விஜயலட்சுமி தொலைபேசி வாயிலாக கேட்டதாகவும் இதனால் பயத்துடன் இருந்த கோகுல்நாத் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் சம்பவ இடம் சென்று சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர் பகுதியில் பெரும் சோகத்தையும்,பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.