Skip to content

7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

மயிலாடுதுறையில் கடந்த 2ம்தேதி முதல் சிறுத்தை நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. செம்மங்குளம் பகுதியில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். சிறுத்தை நீர் வழி தடங்கள் வழியாக இடம் மாறுவது தெரியவந்தது. மகிமலையாறு நண்டலஆறு வீர சோழன் ஆறு பகுதிகளின் வழியாக சிறுத்தை மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தூரம் இடம்பெயர்ந்து குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் பகுதியில் திரிவதாக தகவல் வெளியானது. வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்ததில் சிறுத்தையின் காலடித்தடம் கண்டறியப்பட்டது. மகிமலையாறு,நண்டலாறு, வீரசோழன்ஆறு ஆகிய நீர் வழித்தடங்களில்

கோயம்புத்தூரில் இருந்து WWF – INDIA நிபுணர் குழு முப்பது கேமரா ட்ராப்புகள் வைத்து களத்தில் சிறுத்தையை தேடி வருகின்றனர். 7வது நாளான இன்று டி23 புலியை பிடித்ததில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் காலன் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நேற்று வைக்கப்பட்ட கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை. மேலும் காஞ்சிவாய் கிராமத்தில் நேற்று சிறுத்தையின் கால் தடம் தென்பட்டது. உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மயிலாடுதுறை மாவட்ட எல்லையான காஞ்சிவாய், பேராவூர் ஊராட்சிகளில் கடந்த இரண்டு நாட்களாக தென்படுவதால், அருகிலுள்ள தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட வன அலுவலர்கள் மூலமாக கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் பேட்டி அளித்துள்ளார். இதனால் மக்கள் பீதியில் உரைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!