கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தாய், மற்றும் 17 வயதுடைய மகள் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த அரவக்குறிச்சி, அரங்கபாளையம் பகுதியை சேர்ந்த வீராச்சாமி (54) என்பவர் திருமணம் ஆகி முதல் மனைவியை விவாகரத்து பெற்று இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
தோட்டத்தில் வேலை பார்த்து வந்த பொழுது 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி ஒரு வருடத்திற்கு முன்பு தகாத உறவில் ஈடுபட்டு இரண்டு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் 17 வயதுடைய சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் இதனை வீட்டில் யாருக்கும் சொல்லாத நிலையில் 7 மாதம் கர்ப்பமாக இருந்ததால் வயிற்று வலியால் துடித்ததாகவும், கருக்கலைப்பாகி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததாகவும், திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் அச்சமடைந்து அதனை மறைக்கும் நோக்கத்தில் பெண்ணின் தாயார் தனது வீட்டில் பிறந்த குழந்தையை கட்டைப்பையில் எடுத்துச் சென்று வீட்டிற்கு அருகில் உள்ள அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார்.
பின்னர் வயிற்று வலியால் துடித்த 17 வயதுடைய மகளை கூட்டிவிட்டு சின்னதாராபுரம் தனியாக மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர்கள் இல்லாததால் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கும்
மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 01.10.24 ஆம் தேதியில் சென்று உள் நோயாளியாக சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
அப்போது மருத்துவர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் இது குறித்த தகவலை காவல்துறையினருக்கு கொடுத்ததன் அடிப்படையில் சின்ன தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் அழகு ராமன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு அமராவதி ஆற்றில் புதைக்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் 17 வயதுடைய சிறுமையை கட்டாயப்படுத்தி கற்பமாக்கிய அரவக்குறிச்சி ரங்கபாளையத்தைச் சேர்ந்த வீராச்சாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் 17 வயதுடைய சிறுமியை கர்ப்பம் ஆக்கியதும் தெரிய வந்துள்ளது.