இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் திருச்சி ரயில் நிலையம், தலைமை தபால் நிலையம், மாநகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சி விமான நிலையம், முழுவதும் மூவர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருச்சி மாநகர் முழுவதும் ஜொலித்து வருகிறது
இதனை பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர். எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது…