தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள 7500 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான கணக்கை துவக்கி வைத்து பத்திரம் மற்றும் கணக்கு புத்தகத்தை தமிழ்நாடு பள்ளி கல்லூரி அமைச்சர் மகேஷ் வழங்கினார்.
இந்த விழாவில் திருச்சி காலக்டர் பிரதீப்குமார், திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர்
சுவாதிமதுர்மா, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, திருச்சி சிட்டி கமிஷனர் சத்திய பிரியா, திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா. திருச்சி மாநகர கிழக்கு திமுக செயலாளரும் திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவருமான மதிவாணன் அரசு கொறடா கோவை செழியன், திருச்சி டிஆர்ஓ அபிராமி ஆகியோர் உடன் இருந்தனர்.