திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் சோதனை நடத்தும்படி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அருண்குமார், முகமதுமீரான் ஆகியோர் நேற்று முன்தினம் காலை ஸ்ரீரங்கம் மேலூர்ரோடு அருகே பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்ற 75 ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தார்கள். இச்சோதனையில் ஆட்டோக்களில் தகுதிச்சான்று மற்றும் இன்சூரன்ஸ் இல்லாத ஆட்டோக்கள், அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் என மொத்தம் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனங்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.