5000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட பாடிஜீல் பிட் ஒர்க்ஸ் உடற்பயிற்சி கூடத்தின் புதிய கிளை கோவை பால் கம்பனி அருகே இன்று துவக்கப்பட்டது. இரண்டு முறை பாடி பில்டிங் உலக சாம்பியனான ராஜேந்திரன் மணி மற்றும் குக. வித் கோமாளி நிகழ்ச்சியின் நட்சத்திரம் புகழ் ஆகியோர் பாடிஜீல் பிட் ஒர்க்ஸின் நிறுவனர் க்ரிஸ் பீத்தொவன் முன்னிலையில்
இந்த புது கிளையை துவக்கி வைத்தனர். 7000 சதுரடியில் அமைக்கப்பட்ட இந்த குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில் நவீன உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளன.
இது பற்றி மேலும் க்ரிஸ் பீத்தொவன் கூறுகையில்:-
தரமான பயிற்சியாளர்களும் உடற்பயிற்சி சாதனங்களும் இந்த கூடத்தில் இருந்தால் தான் எங்களை நாடி வரும் வடிக்கையாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை தரமுடியும் என்பதால் இந்த இரு இடங்களிலும் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்.
உடற்பயிற்சியாளராக சர்வதேச அளவில் தரசான்றிதழ் கொண்டவர்களை மட்டுமே நாங்கள்
பயிற்சியாளர்களாக நியமனம் செய்துவருகிறோம். எங்களிடம் இதுபோல 30 சிறப்பான பயிற்சியாளர்கள் உள்ளனர்.எங்கள் உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்துமே மிக தரமானவை. இவைகள் தாய்வான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.மேலும் நாங்கள் ஒருவர் தான் இப்போது வரை ‘டுன்டுரி’ எனும் பின்லாந்து நாட்டின் உடபயிற்சி சாதனங்களை தமிழ்நாட்டில் கொண்டுள்ளோம்.எங்கள் உடற்பயிற்சி கூடமானது இங்கு ஒரு நாளைக்கு 17 மணி நேரம் இயங்கக்கூடிய மிக சில உடற்பயிற்சி கூடங்களில் ஒன்று என்பதில் எங்களுக்கு பெருமையே.
காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை எங்கள் உடற்பயிற்சி கூடம் அனைத்து நாட்களிலும் இயங்கும்.