குவைத்தில் நடந்த தீ விபத்தில் 49 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். கேரளாவை சேர்ந்த 24 பேரும், தமிழகத்தை சேர்ந்த 7 பேரும் பலியானார்கள். அவர்களது உடல் இன்று காலை குவைத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சி கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வர அமைச்சர் மஸ்தான் மற்றும் அதிகாரிகள் கொச்சி சென்றிருந்தனர். உடல்கள் வந்ததும் அதில் 7 தமிழர்களின் உடல்களையும் தமிழகத்தில் அவர்களின் சொந்த ஊர்களான திருச்சி, பேராவூரணி, ராமநாதபுரம் உள்பட அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
பகல் 12 மணிக்கு உடல்கள் ஏற்றப்பட்ட ஆம்புலன்ஸ் தமிழகம் நோக்கி புறப்பட்டது. இன்று இரவு 8 மணி அளவில் ஆம்புலன்ஸ் திருச்சி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.