பிரபல கன்னட நடிகர் தர்ஷன். இவரது காதலியிடம் குறும்பு செய்த ரசிகரை வரவழைத்து நடிகர் தர்ஷன் கொடூரமாக கொலை செய்து சடலத்தை மறைவான இடத்தில் வீசினார். இதில் துப்புதுலக்கிய போலீசார் தர்ஷனை கைது செய்து பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் நடிகர் தர்ஷன் ராஜ உபசாரங்களுடன் நடத்தப்பட்டு உள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி கர்நாடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்ந்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இன்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் இன்று காலை சிறையில் அதிரடி ஆய்வு நடத்தினார்.
பரப்பன அக்ரகார சிறை தலைமை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர் உள்பட 9 அதிகாரிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் பலர் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தெரிகிறது.