மக்களவை தொகுதி மறு சீரமைப்பு அடுத்த வருடத்தில் மேற்கொள்ளப்பட விருக்கிறது. ம மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் எம்.பிக்கள் தொகுதி குறைக்கப்படும் ஆபத்து உள்ளது. குறைக்காவிட்டாலும், வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தானாகவே தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து விடும் என்ற நிலை உள்ளது.
இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நேற்று முன்தினம் தமிழக முதல்வர் அனைதது கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தினார். அதில் தென் மாநில முதல்வர்களுடன் இது தொடர்பாக பேச வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அத்துடன் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக வரும் 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படியும் முதல்வர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
கூட்டு நடவடிக்கை குழு ஏற்படுத்தி, ஒரு செயல்திட்டத்தை வகுக்க இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.