திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி அருகே உள்ள கீழ் குறும்பா தெரு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து சேலம் செல்லும் மார்கமாக உள்ள.தண்டவாளத்தில் நடுவில் மற்றும் ரயில்வே தண்டவாளம் அருகிலேயே 7 எருமை மாடுகள் உயிரிழந்து அங்கங்கே சிதறி உள்ளது.இதனால் தன்பாத் இல் இருந்து கேரளா செல்லும் விரைவு ரயில் மற்றும் செக்கந்தராபாத் இல் இருந்து கேரளா செல்லும் 2 விரைவு ரயில்கள் சுமார் அரை மணி நேரம் தாமதமாக சென்றதது.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த 7
எருமை மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
மேலும் உயிரிழந்த எருமை மாடுகள் ரயிலில் கொண்டு வரப்பட்டு ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்ததா அல்லது மேய்ச்சலுக்கு விடப்பட்டு தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயிலில் சிக்கி உயிரிழந்ததா என்பது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்