திருச்சி கே.கே நகரை சேர்ந்தவர் கனிஷ்கா (11). இவர் திருச்சியில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அகாடமி என்ற பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி கனிஷ்கா சிறு வயது முதலே சுற்றுச்சூழலில் ஆர்வம் மிக்கவர். இவர் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கே.கே நகர் ஓலையூர் சாலையில் குருஞ்சி நகர் அருகே பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது.
இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தினால் முகம் சுளித்து செல்கின்றனர். மேலும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் குடியிருப்பு வாசிகள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
எனவே எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக, இந்த பாதாள சாக்கடை குழாய் உடைப்பை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள பி. கனிஷ்கா…. என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநல காரியத்துக்காக 6ம் வகுப்பு மாணவி கலெக்டருக்கு கடிதம் எழுதிய செயல் பள்ளியிலும், கே.கே. நகர் பகுதியிலும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது.