தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடந்தது. 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. அதைத்தொடர்ந்து மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணிகள் நடந்தது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்ட நிலையில், திட்டமிட்டபடி வரும் 6ம் தேதி(திங்கள்) ரிசல்ட் வெளியிட தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.