தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 6 – வது நாளாக தூக்கு மாட்டிக்கொண்டு அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள்
விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல்.விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
ஒரு கிலோ நெல்லுக்கு 54 ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாய் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில், டில்லி சென்று போராட முதல்வர் அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.