Skip to content
Home » ஆராய்ச்சி மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு…. கேரள பல்கலை முடிவு

ஆராய்ச்சி மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு…. கேரள பல்கலை முடிவு

  • by Senthil

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி (நாளை) கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், கேரளாவில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்கும் திட்டத்தை பல்கலைக்கழகங்களில் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதுதொடர்பாக கேரள பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இனி மாணவிகள் பருவ தேர்வு எழுத அவர்களுக்கு 73 சதவீத வருகை பதிவு இருந்தால் போதும் என்று பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இதுபோல கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாத காலம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மகப்பேறு விடுப்பு முடிந்து கல்லூரியில் சேரும் போது மருத்துவ சான்று சமர்ப்பிக்க வேண்டும். அதனை கல்லூரி முதல்வர்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு சிண்டிக்கேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!