கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு வெளிமாநில மது பாட்டிகள் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் வந்ததின்பேரில் ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி உத்தரவின் பேரில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில்உதவி ஆய்வாளர் முருகநாதன் மற்றும் போலீசார் ஆனைமலை பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான விஷ்ணு பேக்கரியில் சோதனை செய்தனர்.
சோதனையில் கர்நாடக மாநில மது பாட்டிலுடன் இருவரை பிடித்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டதில் விஷ்ணு பேக்கரியில் வேட்டைக்காரன் புதூர் சேர்ந்த செந்தில்குமார்(39) ஆனைமலை சேர்ந்த ராஜேஷ்(39) ஆகியோர் கர்நாடக மாநில மது பாட்டில்களை வாங்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து இருவரிடம் இருந்த 67 கர்நாடகா மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.