மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஷோபிதா துலிபாலா, 2016 ஆம் ஆண்டு ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தை அனுராஜ் காஷ்யப் இயக்கியிருந்தார். அதன்பிறகு தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஷோபிதா கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அடியெடுத்து வைத்தார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் ஷோபிதா. இதில் அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவியின் காதலியாக வானதியாக ஷோபிதா நடித்திருந்தார். முதல் பாகத்தில் குறிப்பிடத்தக்க காட்சிகள் இல்லை என்றாலும், இரண்டாம் பாகம் முழுவதும் ஷோபிதாவின் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஷோபிதா தற்போது தி நைட் மேனேஜர் என்ற பாலிவுட் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். பிகினி காட்சிகள், லிப் லாக் முத்தக் காட்சிகள் என இதில் அன்லிமிடெட்
கிளாமரை காட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த வெப் சீரிஸில் மூத்த பாலிவுட் நடிகர் அனில் கபூருடன் 30க்கும் மேற்பட்ட முத்தக் காட்சிகளில் நடித்துள்ளார். 66 வயதான அனில் கபூருடன் சோபிதா லிப் லாக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இதில் பல காட்சிகளில் சோபிதா மற்றும் அனில் கபூர் இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் உள்ளன. இவரது இந்த முத்த காட்சி விரைவில் வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் பிரபலத்தை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வெப் தொடரை குடும்பத்துடன் பார்க்க முடியாது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஒடிடியில் சென்சார் இல்லை. அதனால் இப்படியான காட்சிகளை அதிகப்படியாக் அதில் இடம்பெறுகின்றன.