தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக மின்வாரியத்தின் சாதனைகளில் ஒரு மைல் கல்லாக நேற்று வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 1ல் இதுவரையில்லாத அளவில், 615 மெகாவாட்டாக மின் உற்பத்தி உச்சம் எட்டியுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.